Join Our Whats app Group Click Below Image

30 Days Training For Teachers

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

30 Days Training For Teachers

ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

The Regional Institute of English , South India ( RIESI ) மூலமாக , ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு 15.02.2021 முதல் 16.03.2021 வரை 30 நாட்கள் பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும் , இப்பயிற்சிக்கு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே , மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு , தங்கள் மாவட்டத்தில் , தொடக்கப்பள்ளி நிலையில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை ( ஏற்கனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் ) ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் தெரிவு செய்து , RIESI Bangalore- லிருந்து பெறப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ( இணைக்கப்பட்டுள்ளது ) விதிமுறைகளைப் பின்பற்றி , ( சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விருப்பக் கடிதத்துடன் ) தேர்ந்தெடுத்து கீழ்க்கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ( MS - Excel Format- ல் ) deesection.exmail.com என்ற மின்னஞ்சலுக்கு 29.01.2021 க்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

1 Comments

  1. Only for BT Teachers

    or
    secondary Grade Teacher also va?

    ReplyDelete