Join Our Whats app Group Click Below Image

Today Tamil News | Today Tamil News Head Lines | இன்றைய தலைப்பு செய்திகள் 30.12.2020

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
Today Tamil News | Today Tamil News Head Lines | இன்றைய தலைப்பு  செய்திகள் 30.12.2020

இன்றைய செய்திகள்
30.12.2020(புதன்கிழமை)
🌹வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்.
ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்.!
🌹🌹நம்மை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசவேண்டும்.
நம்மை மிதிப்பவர்களிடம் வாழ்ந்து பேசவேண்டும்.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌈🌈சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார் 
🌈🌈பொறியியல் முதல் மற்றும் 2ம் பருவ தேர்வுகளுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது
🌈🌈கல்வித்துறை சார்ந்த நீதிமன்ற வழக்கு பணிகளை கவனித்தல் குறித்து CEO/DEO க்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🌈🌈கல்வி, 'டிவி' நிகழ்ச்சிகளுக்கு, சர்ச்சைக்குரிய அம்சங்கள் இல்லாமல், வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் 
🌈🌈தமிழக தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதி முடிவு செய்யப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 
🌈🌈மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த பள்ளிக்கல்வித்துறை ஊழியர் கைது பழைய இரும்புக்கடை உரிமையாளரும்  கைது 
🌈🌈அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் கடந்த 2018-2019ம் ஆண்டில் ஏற்பட்ட வேதியியல் பாடத்துக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன கலந்தாய்வு இன்று நடைபெறுகின்றது 
🌈🌈புத்தாண்டு-2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு . G.O 787 
🌈🌈சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  எழுதக் கூடுதல் அவகாசம் தேவை: மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கோரிக்கை
🌈🌈TRB - கணினி பயிற்றுநர்  நேரடி நியமனம் Grade I (PG Cadre) - 2019 - திருத்தப்பட்ட  உத்தேச தேர்வுப் பட்டியல் வெளியீடு.
🌈🌈இன்று டிசம்பர் 30 இல் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விடுத்துள்ள அழைப்பை ஏற்கிறோம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு.
🌈🌈இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணி தொடங்கியுள்ளது : CoWin’ என்ற பிரத்யேக செயலி மூலம் ஒத்திகை தகவல்கள் சேமிக்கப்படும். 
🌈🌈நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து உரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து-பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு 
🌈🌈MBBS சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி:  நமது நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு
🌈🌈அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச வானியல் போட்டியில் கலந்து கொள்ள இலவச பதிவு மேற்கொள்வது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
🌈🌈எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
🌈🌈நவம்பர் 25-ல் இருந்து டிசம்பர் 23ம் தேதி நள்ளிரவு வரை 33,000 பேர் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
🌈🌈போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில், இரட்டை வேடம் போடுகிறது மத்திய அரசு - அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு குற்றச்சாட்டு
🌈🌈வெளிநாட்டில் இருந்து வரும் பயணி-களை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
🌈🌈பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி
- சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
🌈🌈விரைவில் வருகிறது அனைத்து கார்களிலும் முன்பக்க சீட்டுகளில் AIR BAG கட்டாயம் என்ற உத்தரவு 
ஓட்டுநருக்கான இருக்கை மட்டுமல்லாமல் முன்பக்க சீட்டு அமைந்திருக்கக் கூடிய பகுதியிலும் air bag அமைக்கப்பட வேண்டுமென மத்திய அரசு வரைவு வெளியீடு
🌈🌈நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு.
என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை எனவும் அறிக்கை
நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் 
- ரஜினிகாந்த்
🌈🌈திரையரங்குகளில் ஜனவரி 13-ல் வெளியாகிறது மாஸ்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு
🌈🌈தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும்
- அமைச்சர் செங்கோட்டையன்
🌈🌈ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது முன்பே தெரியும்  - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி
🌈🌈நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன்; ரஜினியின் ஆன்மிக அரசியல் குரல், தேர்தலில் எதிரொலிக்கும்; திராவிட கட்சிகளுக்கு எதிராக ரஜினி முன்னெடுத்த ஆன்மிக அரசியல் வெற்றிபெறும்
- அர்ஜூன் சம்பத்
🌈🌈ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு  கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும்  மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது.  அக்கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் 
- திருமாவளவன்
🌈🌈ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்: சீமான்
🌈🌈விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு எல்லைப்பகுதியில் இலவச wi-fi வசதி 
- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
🌈🌈ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது இல்லத்தின் முன் ரசிகர்கள் தர்ணா
🌈🌈குளிர்காலத்தில் அதிக மக்கள்
தொகை உள்ள பகுதிகளில் உருமாறிய
கொரோனா தொற்று அதிகரிக்கும்; இந்த
வைரஸ் குறித்து யாருக்கும் கவனக்குறைவோ, அலட்சியமோ இருக்கக் கூடாது
- சுகாதாரத்துறை
🌈🌈புதிய  கொரோனா வைரஸ் மாறுபாட்டின் முதல் தொற்று பாகிஸ்தானில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
🌈🌈"பொங்கலுக்கு பின் நல்ல செய்தி வரும்" : நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி
🌈🌈Distance Education - ல் Engineering, MCA, MBA, Architecture பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரியில், ஆன்லைன் மூலம் நடைபெறும்.
தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் பதிவு செய்யலாம்.
ஓரிரு நாளில் அட்டவணை வெளியாகிறது.
🌈🌈தமிழக பள்ளி பாட புத்தகங்களை பழைய இரும்புக்கடைக்கு விற்பனை செய்ததாக மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட்.
🌈🌈என்னுடைய சொத்து விவரத்தை வேட்புமனு தாக்கலின்போது குறிப்பிட்டுள்ளேன்
முதல்வர் பழனிசாமிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில்
🌈🌈ரஜினி ரசிகர்கள் மனோநிலைதான் எனக்கும்; சற்றே ஏமாற்றம்
கமல்ஹாசன், ம.நீ.ம. தலைவர்
🌈🌈திருச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்
🌈🌈கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்தி, மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
🌈🌈"பெரிய திரைப்படத்தை முதலில் OTT-யில் வெளியிட்ட ஒரு குடும்பத்தின் படங்களை தமிழகத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் வெளியிட விரும்பவில்லை
திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேட்டி
🌈🌈ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று ஆவலோடு காத்திருந்த பாஜகவுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது; அவரை பலிகடாவாக ஆக்க பாஜக முயற்சித்தது, அதிலிருந்து தப்பித்துக் கொண்டார் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் காங்கேயத்தில் பேட்டி
🌈🌈உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது சுகாதாரத்துறை அமைச்சகம்
🌈🌈வறட்டு கவுரவம் பார்க்காமல் ரஜினிகாந்த் ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது
திருமாவளவன், விசிக
🌈🌈டிச.31ஆம் தேதி உதகையில் மலை ரயில் சேவை தொடங்கப்படும்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
🌈🌈மிகுந்த வருத்தமான சூழல் ரஜினிகாந்தின் இதயத்தில் தற்போது இருப்பதை அறிகிறேன்; ரஜினியின் முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன் - அர்ஜுன மூர்த்தி
🌈🌈அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரிக்கும் 
சுகாதாரத்துறை
🌈🌈சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த நிலை தற்போதும் நீடிக்கிறது!
சோனியா காந்தி
🌈🌈தமிழகத்திலும் நுழைந்தது உருமாறிய புதுவகை கொரோனா
தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது; பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 33 பேரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
🌈🌈ரசிகர்களும், மக்களும் மன்னியுங்கள் 
அரசியலுக்கு வராமல் மக்கள் பணி செய்வேன்
நடிகர் ரஜினிகாந்த்
🌈🌈தமிழகத்தில் இந்த மூன்று கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் உள்ளவை
👉அஇஅதிமுக, திமுக மற்றும் தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மட்டுமே தமிழகத்தில்  மாநில கட்சி தகுதி பெறுகிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
🌈🌈ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்
அங்கீகரிக்கப்படாத நபர்கள், சில விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டு பணி வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர்
- அண்ணா பல்கலைக்கழகம்
🌈🌈இங்கிலாந்தில் இருந்து பரவும் கொரோனா தொற்று எதிரொலி; தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
🌈🌈நாட்டின் இளம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி பதவியேற்பு: திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்ற ஆர்யா ராஜேந்திரனுக்கு
அரசியல் தலைவர்கள் வாழ்த்து.
🌈🌈அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளுக்கு இணையவழியில் பொதுத் தகுதி தேர்வு - அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.
🌈🌈திபெத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கவும், சீனாவின் எந்த தலையீடும் இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை திபெத் புத்த மதத்தினர் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறும்சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டார்.
🌈🌈சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில், வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக ஜாங் ஜான் என்னும் பெண் பத்திரிக்கையாளர் மீது சீன அரசு நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது.
🌈🌈கடந்த 10 ஆண்டுகளாக கிராம சபை கூட்டங்களையே அதிமுக நடத்தவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல்களில் அதிமுக அரசு முதலிடத்தில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்
🌈🌈அரசியல் வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 
🌈🌈ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வரலனாலும் திமுகவை பாதிக்காது என தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
🌈🌈சசிகலா வெளியேவந்தால் அவரது குடும்பத்தில் தான் மாற்றம் நிகழும், அதிமுகவில் மாற்றம் நிகழாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். தன் நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கவில்லை என்ற முடிவை ரஜினி எடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.                                                 🌈🌈தமிழகத்தில் மூன்றாவது அணி எடுபடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில்  முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நியாயமான கோரிக்கைகளுக்கு டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். அதனைப் பொதுமக்களும் ஆதரிக்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை நீக்க வேண்டும். தமிழக அரசு இந்த சட்டத்தை ஆதரிக்கிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

Post a Comment

0 Comments