Join Our Whats app Group Click Below Image

GOOGLE CHROME பயனர்களுக்கான ஓர் அற்புதமானச் வியக்க வைக்கும் செய்தி!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 GOOGLE CHROME பயனர்களுக்கான ஓர் அற்புதமானச்  வியக்க வைக்கும் செய்தி.


ஆன்ராய்டு ஸ்மார்ட்போனிலுள்ள Google Chrome browser-ல் நீங்கள் ஆன்லைனில் செலுத்தும் கட்டணங்களுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ஆதரிக்கத் தொடங்குவதற்கான புதிய அம்சத்தை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது அதனைப் பற்றி விரிவாக காண்போம்.


❇️  Google Chrome -ஆனது தற்போது இணைய தேடல் பணிக்காக அதிகளவான மக்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இது கூகுளின் சொந்த செய்தியாகும்.


❇️ கூகுளானது தொடர்ந்து தன் பயன்களை மேம்படுத்திக் கொண்டே வருகின்றது.இணையத்தில் பல நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது கூகுளே முதல் இடத்தில் உள்ளது.


❇️ ஆன்ராய்டு (Android) ஸ்மார்ட்போனிலுள்ள Google Chrome browser-ல் நீங்கள் ஆன்லைனில் செலுத்தும் கட்டணங்களுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ஆதரிக்கத் தொடங்குவதற்கான புதிய அம்சத்தை விரைவில் கூகுள் நிறுவனம் சேர்க்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


❇️ ஆண்ட்ராய்டில் மொபைலில் இது எவ்வாறு செயல்படும் என்பது குறித்த விவரங்களுடன், வரவிருக்கும் இப்புதிய அம்சத்தை கூகுள் அறிவித்துள்ளது.


❇️  அடிப்படையில், நீங்கள் Chrome இல் கட்டணத் தகவலுடன் பணிபுரிய பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அமைக்க முடியும் மற்றும் அதைத் தடையின்றி பயன்படுத்தலாம். 

இந்த முறையில் நீங்கள் முதல் முறையாக புதிய டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், சி.வி.வி (CVV) எண்ணை உள்ளிட வேண்டும். இருப்பினும், அடுத்தடுத்த பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் எந்த தகவலையும் உள்ளிட தேவையில்லை.


இந்த பயன்பாடானது நிச்சயமாக செயல்முறையை விரைவாகவும், தடையற்றதாகவும் மாற்றும்,எனினும் இது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

 எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பயோமெட்ரிக்(bio matric) தரவு(data) மூலம் உங்கள் கட்டண விவரங்களை அணுக முடியும். மேலும், பயோமெட்ரிக் தரவு தானாகவே என்கிரிப்ட்(Encrypted) செய்யப்பட்டு சாதனத்தில் இருக்கும் என்று கூகுள்(Google) நிறுவனம் கூறியுள்ளது.


இந்த அம்சம் தற்போது Chrome (beta) பீட்டாவில் மட்டுமே கிடைத்துள்ளது. இது பின்  வரும் வாரங்களில்  Chrome பயனர்களுக்கு புதிய (update) இல் கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments