Join Our Whats app Group Click Below Image

ஒவ்வொரு தேர்விலும் அதிகமாக மதிப்பெண் பெறுவது எப்படி

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 HOW TO GET EXTRA MARKS IN EVEEY EXAMS/TAMIL EXTAM PREPARATION TRICKS AND TIPS TAMIL


ஒவ்வொரு தேர்விலும் அதிகமாக மதிப்பெண் பெறுவது எப்படி?

அதிகமான மதிப்பெண்கள் பெற நாம் என்ன செய்ய வேண்டும்.


தேர்வு என்றால் என்ன?


தேர்வு என்பது ஒருவர் ஒரு செயலை கற்று வருகிறார் அச்செயலில் அவர் முழுமையாக கற்று கொண்டார் என்றால் அவரை சொதிக்க அவர் கற்ற செயலில் இருந்து கேள்விகளை கேட்டு அதில் அவர் தெர்ச்சி பெற்றாரெனில் அச்செயலுக்கு அவர் முழு பூர்த்தி அடைந்தார் என அர்த்தம். இது கல்வியில் சிறு வயது முதலே பயிலும் கல்வியானது படிப்படியாக உயர்ந்து 10,11,12 ஆம் வகுப்புகளில் கட்டாய தேர்வுகளில் தேர்ச்சி அடைவதே கல்வியின் பூர்த்தி ஆகும்.



தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான வழிமுறைகள்:-


❇️ தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் எடுப்பதற்கு நன்கு படிப்பவர்,ஓரளவு படிப்பவர்,படிக்க தெரியாதவர் என்று ஏதும் இல்லை எல்லோருமே அதிக அளவில் மதிப்பெண்களை பெறலாம் அதற்கு‌ பயிற்சி மற்றுமே தேவை.


❇️ பள்ளி தொடங்கும் ஆரம்பத்தில் படிப்பது இறுதி வரை(தேர்வு வரை) நினைவில் வைத்திருக்க வேண்டும்.அதற்கு நீங்கள் தினமும் காலை இரண்டு மணிநேரம், மதியம் இரண்டு மணி நேரம்,மாலை இரண்டு மணி நேரம் என தினமும் படிக்க வேண்டும்.


❇️ தேர்வில் வரும் என குறிப்பிடபட்ட மனப்பாடபகுதி(poems)-களை படித்து மனப்பாடம் செய்வதை விட அதற்கு ராகமிட்டு பாட்டு வடிவில் உச்சரித்து படிப்பதே விரைவில் மனதில் ஏறு இறுதி வரை மனதில் நிற்கும்.


❇️ அன்றாடம் கற்கும் கல்வியை வீட்டில் சென்று எந்த உதவியும் இன்றி எழுதி பாருங்கள் தவறொ,சரியோ எழுதி பார்ப்பதன் மூலம் எழுத்தறிவு உயரும் தேர்வில் எந்த ஒரு பயமும் இருக்காது.


❇️ கற்பித்த பாடத்தை நன்கு உச்சரித்து படிப்பதே விரைவில் மனதில் நிற்கும் ஒரு வழியாகும்.


❇️ தேர்வின் போது முதல் தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த பிறகு யாரிடமும் அத்தேர்வை பற்றி கலந்துரையாடாதிர்கள் ஏனென்றால் கலந்துரையாடல் போது சில பதில்கள் தவறு எனில் அதை நினைத்தே மற்ற தேர்வுகள் சரியாக படிக்க மாட்டீர்கள்,எழுதமாட்டீர்கள் கவனம் சிதறும்.


❇️ தேர்வு எழுத போகும் போது தயவு செய்து பிட்டு தாள்களை எடுத்து செல்லாதீர்கள்.அது நம் நம்பிக்கையை கெடுக்கும்.


❇️ தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது, ஏனென்றால் காலை பொழுதில் நாம் மூலையானது நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும் அப்போது நாம் என்ன படித்தாலும் மனதில் நிற்கும்.



❇️ தேர்வின் போது எழுத தேவையான பேனா, பென்சில், அழிப்பான், கருப்பு மை பேனா,அளவுகொல்(scale) என அனைத்தையும் வீட்டிலிருந்து வரும்போதே  சரியாக இருக்கின்றதா என சரிபார்த்து எடுத்துச் செல்லுங்கள்.


❇️ தேர்வு எழுதும் பொது பயமின்றி பொறுமையாக எந்த தவறு,அடிப்பின்றி அழகாக எழுதுங்கள்.


❇️ உங்கள் தேர்வு தாளை திருத்துபவர்‌ பார்ப்தற்கே அழகுற எந்த அடித்தல் திருத்தலின்றி சரியான முறையில் எழுதுங்கள்.


❇️ எப்போதும் துணைபுத்தககங்களை 1 மதிப்பெண்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் . மற்ற அனைத்தையும் புத்தக வடிவில் இடமிட்டு அதிக அளவில் எழுதுங்கள் அதுவே நல்ல மதிப்பெண்களை கொடுக்கும்.


❇️ மேற்கண்டவாறு  படிப்பில் ஆர்வத்துடன் செயல்பட்டு இவ்வாறு செய்தால் வரும் தேர்வுகளில் கண்டிப்பாக 90% மதிப்பெண்கள் அதற்கும் மேலாக எடுக்கலாம்.தொடர்ந்து நம் கல்வி செய்தி பக்கத்தை காணுங்கள் பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.......


"கற்க கசடற கற்றவை கற்றப்பின்

நிற்க அதற்குத் தக"


*கல்வியால் மட்டுமே ஒருவனை வாழ்க்கையில் ஒருவரை மேல்நொக்கி அழைத்துச் செல்ல முடியும்.


Post a Comment

0 Comments