Join Our Whats app Group Click Below Image

வாட்ஸ் அப்பில் 100 mb க்கும் மேல் உள்ள FILE-களை SHARE செய்வது எப்படி? The Future of Trick to Send Big Files, Large Videos on Whatsapp

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
WHATS APP என்றால் என்ன? இது எதற்கு பயன்படுத்தப்படுகிறது?


வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் பயன்பாடுகளில் ஒன்றாகும். பயன்படுத்த மிகவும்  எளிதாக உள்ளதால் இதன் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செய்திகளைப் பகிர இது உதவுகிறது. மேலும் பயனர்கள் PDF கோப்புகள் மற்றும் Excel sheets மற்றும் ஊடக கோப்புகள் மற்றும் ஆவணங்களை மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இது உதவுகிறது.

ஆனால் இதிலும் ஒரு சில லிமிட்டேஷன்கள்(limitations)  உள்ளன.100MB அளவுள்ள  பைல்கள்( files ), 16MB பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களை பகிர மட்டுமே பயனர்களை வாட்ஸ்அப் அனுமதிக்கிறது.இதுவே வாட்ஸ் அப் இன் rules ஆகும். இந்த லிமிட்டை விட பெரிய FILE-ஐ ஒரு பயனர் அனுப்ப முயற்சித்தால், இச்செயலி பயனருக்கு பிழை செய்தியைக்( error message)  காண்பிக்கும்.இதுவே WhatsApp இன் பயனர்களுக்கு மிகப்பெரிய பிழையாகும்

வாட்ஸ் அப்பில் 100 MB-க்கும் மிகப்பெரிய FILE-களை பகிர முடியுமா?

ஆம் 100MB ஐ விடப் பெரிய பைல்களை வாட்ஸ்அப்பில் பகிர ஒரு தீர்வும் உள்ளது.

அதற்கான வழிகளை ஒன்று பின் ஒன்றாக கீழேக் காண்போம்.
(STEP BY STEPS)

1.உங்கள் மொபைலில் உள்ள Google Drive உள்ளேச் செல்லவும்.(Google drive இல்லையென்றால் Google play store-ல் பதிவிறக்கி கொள்ளுங்கள்.

2 திரையின் கீழ் வலது மூலையில் உள்ள பிளஸ்(plus) ஐகானைத் கிளிக் செய்யுங்கள்.

3 அடுத்ததாக திரையில் காட்டும் Upload File ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

4 File பதிவேற்றப்பட்டதும்,Google Drive -ல் மேலே file-ஐ காண்பீர்கள்.

5 பின் File-ன் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் கிளிக் செய்க.

6 நகல் இணைப்பு ஆப்ஷனை(Copy Link option) தட்டவும். அவ்வாறு செய்வது உங்கள் தொலைபேசியின் கிளிப்போர்டில் fileன் பகிரக்கூடிய இணைப்பின் நகலைச் சேமிக்கும்.இதை நகல் எடுத்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் past செய்துக் கொள்ளலாம்.

7 பின் வாட்ஸ்அப்பைத் திறந்து  நீங்கள் இணைப்பைப் பகிர விரும்பும் பயனர் தொடர்பின்  பெயரைத்(contact whom you want to share the link)தட்டவும்.

8 அதில் உள்ள  Paste ஆப்ஷனை  கிளிக் செய்யவும்

9 மெசேஜ் பாக்ஸில் Google Drive file-ன் பகிரக்கூடிய இணைப்பை நீங்கள் காண்பீர்கள். பின் Send ஆப்ஷனை  கிளிக் செய்க.

இப்போது நீங்கள் 100 MB-க்கும் மேலாக உள்ள file-களையும் 16 MB-க்கு மேலாக உள்ள வீடியோக்களையும் இந்த முறையை பயன்படுத்தி பகிர்ந்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments